16 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர் உள்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்கு


16 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர் உள்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்கு
x
தினத்தந்தி 25 Aug 2021 11:50 PM IST (Updated: 25 Aug 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குளித்தலை,
சிறுமிக்கு திருமணம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் தெற்குகுடி தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த ஜனவரி மாதம் பிளஸ்-2 மாணவியான 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். 
இதுகுறித்து கடவூர் சமூக நல அலுவலர் சித்ராவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார்.
5 பேர் மீது வழக்கு
அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமார், அவரது தந்தை கருப்பையா (47), தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சிறுமியின் தாய், தந்தை என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story