வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2021 12:50 AM IST (Updated: 26 Aug 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

துவரங்குறிச்சி, ஆக.26-
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
அரசு பஸ் மோதியது
சிவகங்கை மாவட்டம், கிருங்காகோட்டையைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 29), நேற்று ராஜ்குமார், அவரது மனைவி ஆனந்தி (27), பாண்டி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சி அருகே முத்துப்பட்டி பிரிவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பாண்டி செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து  துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம் பாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (52). இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி - துறையூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
* திருச்சி ஜி கார்னர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் 65 வயதுமதிக்க தக்க ஆண்பிணம் கிடந்தது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் அவரை யாராவது கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து கே.ேக.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கிலி பறித்தவர் கைது
* திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் மீனாட்சி நகர் சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மனைவி விஜயலட்சுமி (56). கடந்த 14-ந்தேதி இவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று  கீழ கல்கண்டார் கோட்டை அரசாயி கோவில் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் ஹரி பிரசாத் (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது, விஜயலட்சுமியிடம் சங்கிலியை  பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story