மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது

கல்லக்குடி, ஆக.26-
கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை ஆலம்பாடிமேட்டூர் கொள்ளிடக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) , ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story