தற்கொலை செய்வதாக வீடியோ அனுப்பிய `டிக்டாக்' சூர்யாதேவி
தற்கொலை செய்துகொள்வதாக போலீஸ் அதிகாரிக்கு வீடியோ அனுப்பிய `டிக்டாக்' சூர்யாதேவியால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மணப்பாறை, ஆக.26-

`டிக்டாக்’ பெண்
திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் சூர்யா தேவி. சமூகவலைத்தளமான `டிக்டாக்'கில் பிரபலமான இவர் சமீபத்தில் மதுரையில் மற்றொரு `டிக்டாக்' பிரபலமான சிக்கா என்ற சிக்கந்தர் என்பவரை சாலையில் வைத்து செருப்பால் அடித்த வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் மணப்பாறைக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ...
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் சூர்யா தேவி மதுரை போலீஸ் கமிஷனருக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னுடைய பிள்ளைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஒரு வீடியோ அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மதுரை போலீஸ் கமிஷனர், திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை தட்டியும், `காலிங் பெல்லை' அடித்தும் கதவு திறக்கப்படவில்லை.
வேட்டியில் தூக்கு
இதனால், சூர்யாதேவி தற்கொலை செய்து இருப்பாரோ? என்று சந்தேகம் அடைந்த போலீசார் மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.
அப்போது, அறையில் சூர்யா தேவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை எழுப்பி விசாரித்தனர். தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மின்விசிறியில் வேட்டியை தூக்கு கயிறு போல கட்டி வைத்து இருந்துள்ளார்.
அறிவுரை வழங்கிய போலீசார்
இதனையடுத்து போலீசார், சூர்யா தேவிக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அருகில் உள்ள அவரது தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நள்ளிரவில் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story