களி மண் எடுக்க அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
களி மண் எடுக்க அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது, சோழமாதேவி கிராமம். இங்கு மண்பாண்ட தாழிலில் ஈடுபடும் குடும்பத்தினர் 40-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மண்பாண்டங்கள் செய்ய அண்ணங்காரம்பேட்டை கொள்ளிடக்கரை பகுதியில் களிமண் எடுப்பது வழக்கம். அதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து ஒவ்வொரு ஆண்டும் களிமண் எடுப்பதற்கான அனுமதி பெற்று ஒரு ஆண்டு முழுவதற்கும் மண்பாண்டம் செய்ய தேவைப்படும் மண்ணை சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் அவர்களது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவார்கள்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் மாவட்ட கலெக்டரிடம் 2 மாதங்களுக்கு முன்பு களிமண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதுவரை மண் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள், சட்டிகளுடன் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அதிகாரி ராஜேசிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story