பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் அழிப்பு
பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் அழிக்கப்பட்டது
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த வெடி பொருட்களை அழிப்பதற்காக போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மூலம் ஆணை பெற்றனர். இதனைத்தொடர்ந்து வெங்கலம் கிராமத்தில் காவல் துறையினர் மூலம் செயலிழக்க செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல்துறை வெடிபொருள் கண்டறியும் மற்றும் செயலிழக்கப் பிரிவு போலீசார் கலந்துகொண்டு செயலிழக்கச் செய்தனர். மேலும் அப்போது வருவாய் துறையினர், தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story