ரெயில் மோதி வாலிபர் சாவு


ரெயில் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Aug 2021 1:48 AM IST (Updated: 26 Aug 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மோதி வாலிபர் சாவு

நாகர்கோவில்:
குழித்துறை அருகே நேற்று முன்தினம் இரவு புனலூர்- மதுரை பாசஞ்சர் ரெயில் மோதி ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபர் பச்சைநிற டி-சர்ட், வெள்ளை, ஆரஞ்சு கலந்த கைலி அணிந்திருந்தார். அவருடைய பெயர், விவரம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story