குமரியில் இன்று 63 இடங்களில் தடுப்பூசி முகாம்


குமரியில் இன்று 63 இடங்களில் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:05 AM IST (Updated: 26 Aug 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இன்று 63 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

நாகர்கோவில்:
குமரியில் இன்று 63 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதுபற்றி கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 63 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. மேற்கண்ட முகாம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் ஆன்லைனில் டோக்கன் வழங்கப்படுகிறது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, கோட்டார் கவிமணி பள்ளி ஆகியவற்றில் வெளிநாடு செல்வோருக்கான கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் போடப்படும். சிங்களேயர்புரி, கணபதிபுரம், வெள்ளிசந்தை, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, கிருஷ்ணன்கோவில், வடசேரி, வட்டவிளை, வடிவீஸ்வரம், தொல்லவிளை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிகள்
ஆசாரிபள்ளம், பூதப்பாண்டி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், கடுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சுசீந்திரம் அரசு நடுநிலைப்பள்ளி, ஈச்சன்விளை அரசு உயர்நிலைப்பள்ளி, பருத்திவிளை கம்யூனிட்டி ஹால், பட்டாரிவிளை புனித சேவியர் பள்ளி, விழுதயம்பளம் புனித ஜோசப் பள்ளி, தேங்காப்பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி, மண்குழி புனித தோமஸ் பள்ளி, கடயல் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவிகோடு அரசு பி.எப்.எம். பள்ளி, திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்மனை அரசு தொடக்கப்பள்ளி, திருவிதாங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, மரக்கோணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நாகர்கோவிலில் கிறிஸ்துநகர் ஐ.சி.டி.எஸ்., வாத்தியார்விளை ஐ.சி.டி.எஸ்., வடசேரி அரசு தொடக்கப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி, லிட்டில் பிளவர் தொடக்கப்பள்ளி, வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளி, ஐ.சி.டி.எஸ். முதிலியார்விளை, ஐ.சி.டி.எஸ். பட்டகசாலியன்விளை, ஐ.சி.டி.எஸ். தாரவிளை ஆகியவற்றில் அனைத்து வயதினருக்கும் மற்றும் இருதய நோய், நீரழிவு நோய், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி டோக்கன் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
ஆசாாிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் சால்வேசன் பள்ளி ஆகியவற்றில் நேரடி டோக்கன் முறையில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story