பேராவூரணி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்
பேராவூரணி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சிற்றம்பலம்;
பேராவூரணி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள் ஆய்வு
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று
துறவிக்காடு ஊராட்சி வலசக்காடு கிராமத்தில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்படும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருச்சிற்றம்பலம் ஊராட்சி வலச்சேரிக்காடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடி கட்டிட கட்டுமான பணிகள், இதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர், மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு பணிகள், மடத்திக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம், ஊராட்சி மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுவரும் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க உத்தரவு
அப்போது கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வளர்ச்சி பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, குமாரவடிவேல், ஒன்றிய உதவி பொறியாளர் சிவகுமார், ஊராட்சி தலைவர்கள் மோகன் (திருச்சிற்றம்பலம்), சுதாசினிசுப்பையன் (மடத்திக் காடு) மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
Related Tags :
Next Story