வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்


வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:58 AM IST (Updated: 26 Aug 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் சேலத்தில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம்:
வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் சேலத்தில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
இந்தநிலையில் மாவட்டத்தில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் பலர் கொரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story