நெல்லையில் பரவலாக மழை


நெல்லையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Aug 2021 3:09 AM IST (Updated: 26 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரவலாக         மழை   பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் மலைப்பகுதிகளில் மழை பெய்தது. 

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதனால் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் நெல்லையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story