நெல்லையில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அயன் திருவாலீஸ்வரத்தை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 44). இவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் விக்கிரமசிங்கபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீரவநல்லூர் அருகே உள்ள கொட்டாரகுறிச்சியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவர் ஒரு கொலை வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் ஏற்று மூக்காண்டி, மகேந்திரன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அதற்கான ஆணையை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் என்ற ரவி மகன் வேம்பையா (வயது 23). இவர் நெல்லை, மேலப்பாளையம் பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாக, மேலப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உட்கோட்ட உதவி போலீஸ் கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) நாக சங்கர் ஆகியோர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். அதனை போலீஸ் கமிஷனர் ஏற்று, வேம்பையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அதற்கான ஆணையை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story