மாதவரத்தில் குப்பை லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


மாதவரத்தில் குப்பை லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 2:28 PM IST (Updated: 26 Aug 2021 2:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் குப்பைகளை அள்ள ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு மஞ்சம்பாக்கத்தில் இருந்து மாதவரம் தபால் பெட்டி நோக்கி குப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சரவணன்(வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

தபால் பெட்டி அருகே வந்தபோது திடீரென லாரியின் பின்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சரவணன் உடடியாக லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குப்பை லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தீப்பிடித்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சரவணன் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்பை லாரியில் தீப்பிடித்ததற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story