தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை காயம்
தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை காயம்
குன்னூர்
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகள் சில நேரங்களில் பொதுமக்களை தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் அரசு போக்குவரத்து கழகம் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. அப்போது அங்குள்ள தடுப்பு சுவரில் இருந்து காட்டெருமை தவறி கீழே விழுந்தது. இதில், காட்டெருமையின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
இதனால் காட்டெருமை நடக்க முடியாமல் அதே இடத்திலேயே படுத்து கிடந்தது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயமடைந்த காட்டெருமையை மீட்டு, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story