பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் காமராஜர் துறைமுகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய தொழில் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 2 வருடமாக பி.எப்., இ.எஸ்.ஐ. போன்ற பிடித்தம் செய்து தொழிலாளருக்கு கணக்கில் சேர்க்கப்படாமல் இருப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுகம் நுழைவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் விஜயன் கண்டன உரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story