திருப்போரூர் அருகே போலி பத்திரங்கள், ‘சீல்’கள் தயாரித்த 4 பேர் கைது


திருப்போரூர் அருகே போலி பத்திரங்கள், ‘சீல்’கள் தயாரித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2021 4:30 PM IST (Updated: 26 Aug 2021 4:30 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே போலி பத்திரங்கள், சீல் தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி பத்திரங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் வண்டலூர் மற்றும் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் தனிப்படை அமைத்து கடந்த ஒரு வார காலமாக தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கைது
இந்த நிலையில் போலி பத்திரங்கள் தயாரித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 45), திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குமார் (50), சென்னை கிழக்கு தாம்பரம் சாலமன் தெருவை சேர்ந்த மூர்த்தி (47), வண்டலூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜோசப் ரைமான் கிரிஸ்டி (45) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 20 ரூபாய் பத்திரம், 45 ரூபாய் பத்திரம், 100 ரூபாய் பத்திரம், 1,000 ரூபாய் பத்திரம், 2 ஆயிரம் ரூபாய் பத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பத்திரப்பதிவில் பதிவிடும் சீல் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story