வீரபாண்டி, தேனி கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு


வீரபாண்டி, தேனி கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Aug 2021 7:06 PM IST (Updated: 26 Aug 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி, தேனியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.


தேனி:
வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதர நிலையம், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டு அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
மேலும் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை கலெக்டர் ஆய்வு செய்து, பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
முக கவசம்
பின்னர், தேனி பழைய பஸ் நிலையத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு பொதுமக்கள் பலர் முக கவசம் அணியாமல் நின்றனர். மேலும் பஸ் டிரைவர்கள் சிலரும் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்குமாறு நகராட்சி சுகாதார அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது, பஸ் நிலையத்தில் கழிவுநீர் செல்லும் பாதையின் மேல் அமைக்கப்பட்டுள்ள கம்பிகளாலான மேல்மூடிகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், அதனால் விபத்து ஏற்படுவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டரிடம் தெரிவித்தனர். அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அலுவலர் ராகவன், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story