லாரி மோதி பால் வியாபாரி பலி


லாரி மோதி பால் வியாபாரி பலி
x
தினத்தந்தி 26 Aug 2021 7:11 PM IST (Updated: 26 Aug 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்

ராஜபாளையம், 
ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சோலைசேரி கிராமத்தில் இருந்து பால் கொண்டு வந்த பால் வியாபாரி அந்தோணி (வயது 35) என்பவர் சென்றுகொண்ட இருந்தார். அப்போது அவர் மீது தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்தோணி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லாரி டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த ராமசாமியை கைது செய்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story