கலசபாக்கம் அருகே; 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் சாலை மறியல்


கலசபாக்கம் அருகே; 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2021 8:50 PM IST (Updated: 26 Aug 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடலாடி ஊராட்சியில் உள்ள புதிய காலனி பகுதியில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென காஞ்சி செல்லும் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் மங்கைகரசி மற்றும் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சென்று சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் பிறகு அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story