விளாத்திகுளம் அருகே கடலில் மூழ்கி மீனவர் பலி படகை சரி செய்ய நீந்தி சென்றபோது பரிதாபம்


விளாத்திகுளம் அருகே கடலில் மூழ்கி மீனவர் பலி படகை சரி செய்ய நீந்தி சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 26 Aug 2021 9:11 PM IST (Updated: 26 Aug 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

கடலில் மூழ்கி மீனவர் பலி

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே சேதமடைந்த படகை சரி செய்ய  கடலில் நீந்தி சென்ற மீனவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
மீனவர்
 விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் மெஸ்வந்த் (வயது 21). மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் காற்றின் வேகம் அதிகரித்ததால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இந்த வகையில் சேதமடைந்து கடலில் 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த தனது நாட்டுப் படகினை சரி செய்ய நங்கூரம் அமைப்பதற்காக மெஸ்வந்த் கடலில் நீந்தி சென்றுள்ளார்.
கடலில் மூழ்கி சாவு 
அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் நீந்த முடியாமல் கடலில் மூழ்கியுள்ளார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் மூழ்கிய மெஸ்வந்தை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
சக மீனவர்கள் சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மெஸ்வந்தின் உடலை கடலில் இருந்து வெளியே மீட்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பார் கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று அவரது  உடலைக் கைப்பற்றிய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அவர் கடலில் தவறி விழுந்து பலியானது குறித்து வேம்பார் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story