ஆவணி திருவிழா கொடிப்பட்டம் யானை மீது உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடிப்பட்டம் யானை மீது உலா வந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
இதையடுத்து, நேற்று மாலை 4 மணிக்கு தூண்டிகை விநாயகர் கோவிலில் கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர் யானை மீது அமர்ந்து கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு கோவில் கிரிபிரகாரம் சுற்றி கோவிலை வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்பட்டம் கோவிலுக்குள் சென்றது.
நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story