நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா-பெண் பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா-பெண் பலி
x
தினத்தந்தி 26 Aug 2021 10:19 PM IST (Updated: 26 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 529 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது.

பெண் பலி

நேற்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 556 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 538 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 465 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குமாரபாளையத்தை சேர்ந்த 57 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 466 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story