தியானபுரம் கோவில் அருகில் புதிய மதுக்கடை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது
திருவாரூரில் தியானபுரம் கோவில் அருகில் புதிய மதுக்கடை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என தண்டலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூரில் தியானபுரம் கோவில் அருகில் புதிய மதுக்கடை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என தண்டலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஊராட்சி மன்ற கூட்டம்
திருவாரூர் தண்டலை ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகாலட்சுமி செல்வம், செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மன்ற உறுப்பினர்கள் சுமதி, சித்ரா, பார்த்தசாரதி, இளங்கோவன், தியாகராஜன், மகாலட்சுமி, சாந்தி, கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியானபுரம் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் புதிதாக அரசு மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடை திறந்தால் கோவிலுக்கு நாள்தோறும் வரும் பக்தர்கள், பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த பகுதியில் குடியிருப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்.
அனுமதி வழங்க கூடாது
எனவே இந்த மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது. சிலம்பு நகர், தியாகராஜர் நகர், திரு.வி.க. நகர், ராஜகணபதி உள்ளிட்ட நகர்களில் தார் சாலை வசதி அமைக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உடனுக்கு உடன் நிறைவேற்றப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story