15 சதவீத ஆசிரியர்களுக்கு 1-ந்தேதிக்குள் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி
இதுவரை போடாத 15 சதவீத ஆசிரியர்களுக்கு 1-ந்தேதிக்குள் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
சிவகங்கை,
இதுவரை போடாத 15 சதவீத ஆசிரியர்களுக்கு 1-ந்தேதிக்குள் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
1-ந்தேதி திறப்பு
பள்ளிகள் திறக்கும்போது உரிய நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மற்றும் மெட்ரிக் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
73,365 மாணவர்கள்
இந்த பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 73 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்களை வைத்து பள்ளிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
85 சதவீதம் பேர்
மாவட்டத்தில் இதுவரை 85 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மீதியுள்ள 15 சதவீத ஆசிரியர்கள் 1-ந்தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டு சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதித்து பின் வகுப்புகளுக்கு அனுப்பும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story