சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் கன்னிராஜபுரம் கிழக்குத்தெரு வயனக்கண் மனைவி பொன்னுத்துரை (வயது 65) தனது பேத்தியுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிறுமி கழுத்தில் அணிந்திருந்த சிலுவையுடன் கூடிய 3½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து சாயல்குடி போலீசில் அவர் புகார் அளித்தார். இதே திருவிழாவில் பங்கேற்ற சிந்தாமணி என்பவரின் 4 பவுன் தாலி சங்கிலி திருட்டு போனதாக அவர் புகார் கொடுத்தார். 2 புகார்களையும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.