திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
73 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நேற்று மேலும் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை, திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 957-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 191-ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 842 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 924-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story