புதிதாக 20 அதிவேக ரோந்து படகுகள்-ஏ.டி.ஜி.பி. சந்தீப்மிட்டல் தகவல்

x
தினத்தந்தி 27 Aug 2021 12:19 AM IST (Updated: 27 Aug 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு கடலில் ரோந்து செல்ல வசதியாக மேலும் புதிதாக 20 அதிவேக ரோந்து படகுகள் விரைவில் வழங்கப்படும் என்று ஏ.டி.ஜி.பி.சந்தீப்மிட்டல் கூறினார்.

ராமேசுவரம்,

மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ராமேசுவரம் ஒலைகுடா கடற்கரையில் நேற்று தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 10 ஆயிரம் பனை மர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்.பி. குணசேகரன் முன்னிலை வகித்தார். கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.சின்னச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.இதில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி. சந்தீப்மிட்டல் ஒலைகுடா கடற்கரையில் பனைமர விதை மற்றும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
20 ரோந்து படகு
 தமிழக கடலோர போலீசார் எப்போதும் மீனவர்களோடு இணைந்து செயலாற்றி வருகின்றனர். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கடலோர போலீசாரின் இலவச தொலைபேசி எண் 1093 எந்நேரமும் அழைத்து உதவி கேட்கலாம்.தமிழகத்திலுள்ள அனைத்து கடலோர காவல் நிலையங்களுக்கும் மேலும் புதிதாக அதிநவீன 20 புதிய ரோந்து படகுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. தமிழக கடல் பகுதியை பொறுத்தவரை பாதுகாப்பு சிறப்பாகவே உள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒலைகுடா கிராமதலைவர் ஜெபமாலை பாஸ்கர், செயலாளர் பிரபு, பொருளாளர் ஆனந்த ராஜா, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயராஜா, ராமேசுவரம் ரோட்டரி கிளப் தலைவர் சேக்சலீம், செயலாளர் முத்து மணிகண்டன், பட்டய தலைவர் சந்திரன், துணை ஆளுநர் நாகராஜ், விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ராமேசுவரம்,ஆக.27-
தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு கடலில் ரோந்து செல்ல வசதியாக மேலும் புதிதாக 20 அதிவேக ரோந்து படகுகள் விரைவில் வழங்கப்படும் என்று ஏ.டி.ஜி.பி.சந்தீப்மிட்டல் கூறினார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ராமேசுவரம் ஒலைகுடா கடற்கரையில் நேற்று தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 10 ஆயிரம் பனை மர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்.பி. குணசேகரன் முன்னிலை வகித்தார். கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.சின்னச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.இதில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி. சந்தீப்மிட்டல் ஒலைகுடா கடற்கரையில் பனைமர விதை மற்றும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
20 ரோந்து படகு
 தமிழக கடலோர போலீசார் எப்போதும் மீனவர்களோடு இணைந்து செயலாற்றி வருகின்றனர். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கடலோர போலீசாரின் இலவச தொலைபேசி எண் 1093 எந்நேரமும் அழைத்து உதவி கேட்கலாம்.தமிழகத்திலுள்ள அனைத்து கடலோர காவல் நிலையங்களுக்கும் மேலும் புதிதாக அதிநவீன 20 புதிய ரோந்து படகுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. தமிழக கடல் பகுதியை பொறுத்தவரை பாதுகாப்பு சிறப்பாகவே உள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒலைகுடா கிராமதலைவர் ஜெபமாலை பாஸ்கர், செயலாளர் பிரபு, பொருளாளர் ஆனந்த ராஜா, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயராஜா, ராமேசுவரம் ரோட்டரி கிளப் தலைவர் சேக்சலீம், செயலாளர் முத்து மணிகண்டன், பட்டய தலைவர் சந்திரன், துணை ஆளுநர் நாகராஜ், விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story