பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு


பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 12:27 AM IST (Updated: 27 Aug 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு

பல்லடம்,
பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
 
கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ரோட்டில் மக்கள் நடமாட்டமும், வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், அரசால் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கப், பாலித்தீன் கவர் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இருந்ததால் இவற்றை கண்காணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்து...
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல்லடம் சுற்று வட்டார பகுதியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டீகடை மற்றும் ஓட்டல்களில் சூடான காபி, பால், சாம்பார், குருமா போன்றவை பாலித்தீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் தரப்படுகிறது. இதேபோல், மிக்சர், முறுக்கு போன்ற உலர்ந்த உணவுப் பொருட்களை பார்சல் செய்வதற்கும், பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது. சூடான திட, திரவ உணவுப் பொருட்களை பார்சல்செய்ய்யும்போது பாலித்தீன் பைகள் இளகி அதிலுள்ள நச்சுப்பொருட்கள் உணவுப் பொருட்களோடு கலந்து, உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக அறிவித்தது ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, பெயரளவில் மட்டுமே அதிகாரிகள் செயல்பட்டனர். இதுநாள் வரை, மறைமுகமாக இருந்த பிளாஸ்டிக் கவர் பயன்பாடு தற்போது, நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களிடமும் விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற அரசு விதிமீறலை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும். அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story