கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரையும், அடுத்த மாதம்(செப்டம்பர்) 3, 4, 5 ஆகிய தேதிகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவில் மற்றும் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story