இந்து முன்னணியினர் 30 பேர் மீது வழக்கு
இந்து முன்னணியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே நேற்று காலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் கலந்து கொள்ள இருந்ததாகவும், அவரை வரவேற்பதற்காக திருச்சி கோட்டை பகுதியிலுள்ள குடமுருட்டி பாலம் அருகே உள்ள சோதனை சாவடி பகுதியில் இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் உள்பட 30 பேர் போலீசாரின் அனுமதியின்றி ஒன்று கூடினர். இதுகுறித்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், நோய்த் தொற்றை பரப்பும் விதமாக ஒரே இடத்தில் ஒன்று கூடியதாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
Related Tags :
Next Story