2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை ராமையன்பட்டியை அடுத்த வேப்பங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜ் (வயது 38). இவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அம்பை அருகே உள்ள கோவில்குளம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் (26). இவர் அடிதடி, திருட்டு, கொலை முயற்சி வழக்கில் அம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் ஏற்று ஜேம்ஸ் ராஜ், வடிவேல் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story