மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 2:38 AM IST (Updated: 27 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
திருவட்டார் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், முருகேசன், முகமது உசேன், அண்ணாதுரை, அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story