சேலம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Aug 2021 4:48 AM IST (Updated: 27 Aug 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியானார்கள்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியானார்கள்.
65 பேருக்கு தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 65 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சேலம் மாநகராட்சி பகுதியில் 15 பேர், நங்கவள்ளியில் 7 பேர், மேட்டூர் மற்றும் எடப்பாடியில் தலா 6 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், மேச்சேரி மற்றும் சங்ககிரியில் 4 பேர், ஓமலூரில் 3 பேர், ஆத்தூர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டியில் தலா 2 பேர், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் நகராட்சி, வீரபாண்டி, சேலம் ஒன்றியம், மகுடஞ்சாவடி, காடையாம்பட்டி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 65 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 107 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
2 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று திடீரென உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,626 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story