சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்:
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கடத்தி திருமணம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கொரசலூர் வானவரெட்டி காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவர், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துக்கொண்டார்.
இதையடுத்து சிறுமி சேலம் காட்டூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் உறவினர்கள் தரப்பில் சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி திருமணம் செய்த பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
10 ஆண்டுகள் சிறை
இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, சிறுமியை கடத்தி திருமணம் செய்த பிரகாசிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story