கச்சேரி வீதியில் கார்கள் நிறுத்த தடை


கச்சேரி வீதியில் கார்கள் நிறுத்த தடை
x
தினத்தந்தி 27 Aug 2021 4:45 PM IST (Updated: 27 Aug 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, கார்களை கச்சேரி வீதியில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்களை குட்டை திடலில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை
உடுமலையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, கார்களை கச்சேரி வீதியில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்களை குட்டை திடலில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கச்சேரி வீதி
உடுமலை கச்சேரி வீதியில் தாலுகாஅலுவலகம், கோர்ட்டுகள், பொது இ சேவை மையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள் மற்றும் தனியார்அலுவலகங்கள், கடைகள் ஆகியவை உள்ளன. அதனால் இந்த வீதியில் பகலில் வாகன போக்குவரத்துஅதிகம் இருக்கும். 
இந்த வழியாகத்தான் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ்கள் சென்று வரும்.கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள் தங்களது வாகனங்களை சாலைபகுதியிலேயே நிறுத்தி விட்டு, தங்களது பணிகளை பார்க்கசென்றுவிடுகின்றனர்.அதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீதியில் போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் மேற்கொண்டுள்ளார்.
வாகனங்களை நிறுத்த தனி இடம்
அதன் படி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு உள்ள காலி இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், அருகில் உள்ள குட்டைத்திடலில் கார்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வீதியில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படாமல் தடுத்து, அவற்றை பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி விட்டு வரும்படிஎடுத்துரைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 2 போக்குவரத்து போலீசார்அந்தபகுதியில்பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கார்கள் குட்டைத்திடலில் நிறுத்தப்பட்டு வருகின்றன.



Next Story