கூடைப்பந்தாட்ட கழக செயற்குழு கூட்டம்
பரமக்குடியில் கூடைப்பந்தாட்ட கழக செயற்குழு கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
தமிழ்நாடு மாநில கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ஆதம் அர்ஜுனா தலைமையின்கீழ் இயங்கும் ராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் செயற்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைமை நிறுவ னராக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மனாக முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு, மாவட்ட சீனியர் துணைத்தலைவராக நவாஸ்கனி எம்.பி., மாவட்ட தலைவராக கமலஹாசன், மாவட்ட செயலாளராக வேலன், மாவட்ட பொருளாளராக அருள்ராஜ் தேசிங்கு, மாவட்ட துணைத் தலைவர்களாக அருள் பிரபாகர், உதயகுமார், முருகன் ஆகியோரும் மாவட்ட துணைச் செயலாளர்களாக முத்துச் சாமி, சுதாகர் முத்துக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பீட்டர் ராயப்பன், போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேந்திர பாண்டியன், பரமக்குடி நகர் தி.மு.க. பொறுப்பாளர்கள் சேது கருணாநிதி, ஜீவ ரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. பொறுப்பு குழு உறுப் பினர்கள் ஜானகிராமன், கலீல் ரகுமான், மற்றும் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story