மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 27 Aug 2021 6:03 PM IST (Updated: 27 Aug 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம் என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், 
மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் 30.9.21- க்குள்ளும், புதியது இனங்களுக்கு 5.11.21-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 
மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை கட்டாயம் குறிப்பிடவேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 15.10.21 முதல் செயல்பட தொடங்கும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 14.11.21- க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
இணையதளம்
அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் 16.11.21 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப் பங்கள் 31.12.21-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept- யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Next Story