காயல்பட்டினத்தில் கட்டிட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி சாவு


காயல்பட்டினத்தில் கட்டிட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Aug 2021 8:42 PM IST (Updated: 27 Aug 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆறுமுகநேரி:
ஏரல் அருகே உள்ள நட்டாத்தி கண்ணாடிவிளையை சேர்ந்த ஈன முத்து மகன் செல்லத்துரை (வயது 59). கட்டிட தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.
இவர் காயல்பட்டினத்தில் கட்டிட வேலைகளுக்காக வந்து தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சொளுக்கார தெருவில் உள்ள ஒருவருடைய வீட்டில் கட்டிட வேலை நடந்துள்ளது. அப்போது செல்லத்துரை சாக்கில் மண் அள்ளிக்கொண்டு ஏணி வழியாக கட்டிடத்தின் மேலே ஏறி உள்ளார். அப்போது ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். மேலும் நெஞ்சில் பலத்த அடிபட்டுள்ளது. உடனடியாக அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story