கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உலாவரும் காட்டுயானை பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உலாவரும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பேத்துப்பாறை, அஞ்சு, பாரதி அண்ணா நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை உலா வந்தது. இந்த யானை தற்போது இடம்பெயர்ந்து மேல்மலை பகுதியான கூக்கால் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களுக்கு செல்லாமல் அச்சம் அடைந்து உள்ளனர். இதனிடையே ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story