உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
திண்டுக்கல்லில் உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளும் தொடங்க இருக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்திரங்கள் சரிபார்ப்பு
அதன்படி கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த மாவட்டத்தில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களை சரிபார்த்து வைக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் என மொத்தம் 5 ஆயிரம் எந்திரங்கள் இருப்பு உள்ளன. இவற்றை சரிபார்க்கும் பணி திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story