மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலிண்டர்கள். மின்னல்தாக்கி பசுமாடு பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. கலசபாக்கத்தில் 137.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆரணியில் மழைவெள்ளத்தில் சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. கலசபாக்கத்தில் 137.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆரணியில் மழைவெள்ளத்தில் சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டது.
பலத்த மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 137.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதேபோன்று ஆரணி நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அப்போது சேவூர் பகுதியில் ஈஸ்வரன் கோவில் தெருவில், வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்துவிட்டு, காலி சிலிண்டர்களை தெருவில் அடுக்கி வைத்திருந்தனர்.
சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
அப்போது பெய்த கனமழையின் காரணமாக தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தெருவோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படாததால், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
போளூர் பகுதியிலும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழைகாரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியள்ளது. தொடர் மழை காரணமாக போளூர் பகுதியில் குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
மின்னல் தாக்கி பசுமாடு பலி
போளூர் அடுத்த படியம்பட்டு கிராமத்தில் பெருமாள் என்பவரின் பசு மாடு மின்னல் தாக்கியதில் இறந்தது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வெம்பாக்கம்- 78, ஆரணி- 77.5, போளூர்- 73.8, செய்யாறு- 61, ஜமுனாமரத்தூர்- 9, கீழ்பென்னாத்தூர்-1.
Related Tags :
Next Story