நளினிக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரோல் கேட்டு மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23-ந் தேதி நளினி தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு, சிறைத்துறை அதிகாரிகள் மூலம் கோரிக்கை மனு அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில், நளினியின் உடல் நிலையை பரிசோதனை செய்யவதற்காக நேற்று காலை 9.45 மணியளவில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினியை வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த காவலுடன் அழைத்துச்சென்றனர்.
மருத்துவ பரிசோதனை
அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்சிகிச்சை பிரிவிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 6 மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு மதியம் 1 மணி அளவில் மீண்டும் பெண்கள் தனிச்சிறைக்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். நளினி உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என டாக்டர்ர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story