யானை கண்காணிப்பு குழுவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை
கூடலூர் வனக் கோட்டத்தில் உள்ள யானை கண்காணிப்பு குழுவில் பணியாற்றும் ஊழியர்கள் 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
கூடலூர்
கூடலூர் வனக் கோட்டத்தில் உள்ள யானை கண்காணிப்பு குழுவில் பணியாற்றும் ஊழியர்கள் 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஊருக்குள் வரும் யானைகள்
கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, கூடலூர், நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங் களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை கண்காணித்து துரத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் யானை கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
4 மாதமாக சம்பளம் இல்லாமல் பாதிப்பு
அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.6,750 வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கும் பணிகளில் அவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
எனவே தங்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வழங்க நடவடிக்கை
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறும்போது, யானை கண்காணிப்புக்குழு ஊழியர்களின் பணி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் சம்பளம் வழங்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story