உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் ரஞ்சித் (வயது 24). இவர், கடந்த ஆண்டு 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து கர்ப்பமான அந்த சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து, மருத்துவமனை டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story