தேனி மாவட்டத்தில் 4 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பு
தேனி மாவட்டத்தில் 4 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தேனி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தியேட்டர்களை கடந்த 23-ந்ததி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஆனால், தேனி மாவட்டத்தில் அன்றைய தினம் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 18 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை நேற்று திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதற்காக தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. சமூக இடைவெளியுடன் பார்வையாளர்கள் அமரும் வைகயில் இருக்கைகளில் அறிவிப்புகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்கிடையே தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தியேட்டர்கள் வெளிச்சோடின. காலையில் முதல் காட்சிக்கு ரசிகர்கள் போதிய அளவில் வரவில்லை. இதனால் தியேட்டர்களில் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. பிற்பகல் காட்சி, மாலை நேர காட்சியிலும் குறைவான ரசிகர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மேலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் பெரும்பாலான தியேட்டர்கள் ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் வருகையும் குறைவாக இருந்ததால் தியேட்டர்கள் களை இழந்து காணப்பட்டன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான பின்னரே தியேட்டர்கள் களைகட்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story