திருவண்ணாமலை அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு


திருவண்ணாமலை அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 27 Aug 2021 10:44 PM IST (Updated: 27 Aug 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணாபுரம்

திருவண்ணாமலை அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை அடுத்த பேராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 61). இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் குண்டு பாய்ந்து பச்சையப்பன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பச்சையப்பன் அனுமதிக்கப்பட்டார். 

3 பேரிடம் விசாரணை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 
அத்துடன் சந்தேகப்படும்படியான 3 ேபரை திருவ
ண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story