நெமிலி பகுதியில் 1,069 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது


நெமிலி பகுதியில் 1,069 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 27 Aug 2021 11:14 PM IST (Updated: 27 Aug 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

1,069 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று அகவலம், பட்டாளத்து கண்டிகை, பருவமேடு, சயனபுரம், பள்ளூர், புதுகண்டிகை, எலத்தூர், செல்வமந்தை, சம்பத்ராயன்பேட்டை, அரும்பாக்கம், பாடி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 1,069 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர்.

Next Story