சிப்காட் அருகே கிரேனில் இருந்து இரும்பு பைப் விழுந்து ஊழியர் பலி


சிப்காட் அருகே  கிரேனில் இருந்து இரும்பு பைப் விழுந்து ஊழியர் பலி
x
தினத்தந்தி 27 Aug 2021 11:37 PM IST (Updated: 27 Aug 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கிரேனில் இருந்து இரும்பு பைப் விழுந்து ஊழியர் பலி

சிப்காட்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 52) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஜெய்சங்கர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று, அங்கிருந்த கிரேனில் இருந்து, இரும்பு பைப் அறுந்து அவர்மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கர் உடனடியாக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story