திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம். இன்று நடக்கிறது


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம். இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 27 Aug 2021 11:40 PM IST (Updated: 27 Aug 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பத்தூர்

தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைத்து வகையான ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக திருப்பத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலகம், ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலகம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகில், நாட்டறம்பள்ளி, கந்திலி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய வட்டார கல்வி அலுவலத்திலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு கொரோன தடுப்புசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அமர் குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story