வாணியம்பாடியில் கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே குளம்போல் தேங்குகிறது. தேங்கும் மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
இந்தநிலையில் வாணியம்பாடி-உதயேந்திரம் செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கால்வாய்களை தூர்வார வேண்டும், மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் அலி, சீனிவாசன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் விரைந்து வந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story